அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களுக்கு ட்ரம்ப் வைத்த ஆப்பு!!

0
10
Naduvan News

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் இருக்கவேண்டும் என்ற புதிய விதிமுறையை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், ஏராளமான இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, ட்ரம்ப் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

புதிதாக விதிக்கப்பட்ட விதிகளின் படி, அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று குடியேறுவதற்கு, இந்தியா உள்பட மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசின் மருத்துவக் காப்பீடு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை அவர்கள் சார்ந்திருக்காமல், வருமானம் அதிகபடியாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இதனால் குறைந்த அளவு வருமானத்துடன் கிரீன் கார்டு விண்ணப்பிக்கும் ஏராளமானோர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் இதுவரை நான்கு லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் இதனால் பாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய விதிகளின் படி அமெரிக்கர்களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிகளவில் சென்றடையும் என்றும், அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here