அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)

0
100

அரியலூர் அரசு ஐ.டி.ஐ-யில் 2021-2022 ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையத்தளம் மூலம் மாணவர்கள் ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ-க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று,
40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது, விண்ணப்ப கட்டணம் ரூ.50/- Debit Card / Credit Card / Net Banking வாயிலாக செலுத்த வேண்டும்

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையம் உள்ளது. தனியார் கணினி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055877, 04329-228408 என்ற தொலைபேசி வாயிலாகவும், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055879 என்ற தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.என்.நாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here