ரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்

0
39

அமராவதி: ரேசன் பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். பிப்.1-ம் தேதி முதல் அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்., கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை கொண்டு வருவேன் என வாக்குறுதியளித்தார்.

இதையடுத்து இத்திட்டத்தை இன்று விஜயவாடாவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். அம்மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை வீடுகளுக்கு நேடியாக சென்று டெலி வரி செய்யும் திட்டம் வரும் பிப்.1-ம் தேதி முதல் கொண்டு வர உத்தரவிடபட்டுள்ளது.
இதற்காக 2,500 குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ. 539 கோடியில் 9,260 நடமாடும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் தரமான அரிசி உள்ளிட்ட பல்வேறு ரேசன் பொருட்கள், வீடுகள் தோறும் நேரடியாக சென்று விநியோகிகப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 5 கோடி81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டு தாரர்கள் பயனடைவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here