தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது

0
4

தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் மாட்டு வண்டிகளில் சிலர் வருவதை பார்த்து, அவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, கார்குடி சுத்தமல்லி ஓடையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாட்டுவண்டி தொழிலாளர்களான வேணாநல்லூர் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி(வயது 65), கார்குடி கிராமத்தை சேர்ந்த காசிநாதன்(52), கோட்டியால் கிராமத்தை சேர்ந்த பழனிராசு(46), பெரியசாமி(48), சுரேஷ்குமார் (40) ஆகியோரையும், மாட்டு வண்டிகளையும் தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்து, புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார். அவர்கள் 5 பேரும் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 மாட்டு வண்டிகளும் மணலோடு பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here