விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

அரியலூர் அரியலூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகள் குறித்து மாவட்ட அளவிலான நிபுணர் குழு மூலம் விவசாயிகள் தேர்தெடுக்கப்படுகின்றனர். விருதுக்கு மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் வருகிற 30-ந்தேதிக்குள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்