அரியலூர்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில்‌ பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்‌ 6 பணியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன. இந்தப்‌ பணியிடங்கள்‌ புறச்சேவை நிறுவனம்‌ (Out Sourcing) மூலம்‌ நிரப்பப்பட உள்ளன.

Solid Waste Management & Sanitation Expert  காலிப்பணியிடங்களின்‌
எண்ணிக்கை- 2. Liquid Waste Management Expert  காலிப்பணியிட எண்ணிக்கை- 1. மேற்படி 3 பணிகளுக்கும்‌ Bachelor Degree in Enviramental Engineering / Civil Engineering  படித்திருக்க வேண்டும்‌. மேலும்‌ 1-2 வருட பணி அனுபவம்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மேற்காணும்‌ பணிகளுக்கு மாத ஊதியம்‌ ரூ.35,000/- வழங்கப்படும்‌.

Planning Convergence & Monitoring  காலிப்பணியிட எண்ணிக்கை-1. B.Tech/MBA.,M.SC படித்திருக்க வேண்டும்‌. இப்பணிக்கு மாத ஊதியம்‌ ரூ.35,000- வழங்கப்படும்‌.

IEC Consultants காலிப்பணியிடங்களின்‌ எண்ணிக்கை- 2. இப்பணிக்கு P.G Degree in mass Communication / Mass Media படித்திருக்க வேண்டும்‌. மேலும்‌ 2-3 வருட பணி அனுபவம்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அரசாங்க அதிகாரிகள்‌, கல்வியாளர்கள்‌, சமூக ஊடகங்களில்‌ செல்வாக்கு உள்ளவர்களுடன்‌ தொடர்பு கொள்வது, தேவைப்படும்‌ சூழலில்‌ பணிபுரியும்‌ திறன்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. கணினியில்‌ MS WORD, Power Point , Abobe Photoshop  தெரிந்திருக்க வேண்டும்‌. வீடியோ தயாரித்தல்‌, மீம்‌
தயாரித்தல்‌, சுவரொட்டிகள்‌ மற்றும்‌ துண்டு பிரசுரங்கள்‌ உருவாக்குதல்‌ போன்றவற்றில்‌ அனுபவம்‌ உள்ளவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ முன்மாதிரியாக எழுதும்‌ திறன்‌, ஒருவொருக்கொருவருடன்‌ தொடர்பு கொள்ளுதல்‌, விளக்கவுரை அளிக்கும்‌ திறன்‌, தமிழ்‌ கலாச்சரங்களை புரிந்துகொள்ளுதல்‌ ஆகியவை பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. இப்பணிக்கு மாத ஊதியம்‌
ரூ.25,000- வழங்கப்படும்‌. மேற்காணும்‌ அனைத்துப்‌ பணிகளுக்கும்‌ வயது 30-க்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

விண்ணப்பங்கள்‌ வெள்ளைத்தாளில்‌ தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர்‌/திட்ட இயக்குநர்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம்‌, அரியலூர்‌
621704 என்ற முகவரிக்கு 15.10.2023 மாலை 5.00 மணிக்குள்‌ நேரிலோ அல்லது அஞ்சல்‌
மூலமாகவோ அனுப்பி வைக்கவேண்டும்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப, அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.