அரியலூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநில வனத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘அய்யன் ஆப்’ செயலியை எப்படி பயன்படுத்துவது என்ற பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சபரிமலையில் சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கொட்டும் மழையையும் பயன்படுத்தாமல் இருமுடி சுமந்து வந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 17ஆம் தேதி முதல் 9 நாட்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் கேரளா மாநில வனத்துறை சார்பில் ‘அய்யன் ஆப்’ என்ற புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்களை இந்த செயலி மூலம் பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெரியார் டைகர் ரிசர்வ் ஃபாரஸ்ட் சார்பில் உருவாக்கப்படுள்ள அய்யன் செயலி தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல் எண்ணை உபயோகித்து ஆப்பினுள் செல்லலாம். சபரிமலை கோயிலில் நடக்கும் பூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் ஆப்பில் இடம்பெற்றுள்ளன. சபரிமலை செல்லும் வழிப்பாதைகள், வனத்தில் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதைவை குறித்த வழிகாட்டல்கள் போன்றவை இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளன. அவசரக் கால உதவிக்காக தீயணைப்புத்துறை, வனத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, மின்சாரவாரியம், ரயில்வே விசாரணை, கேரள அரசு போக்குவரத்துத்துறை, மெடிக்கல் டிப்பார்ட்மெண்ட் ஆகியவற்றின் தொடர்பு எண்களும் இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளன.
2023-2024 ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவும் விதமாக அய்யன் ஆப் வெளியிடப்பட்டுள்ளது என்று கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார். பக்தர்கள் தேர்வு செய்யும் வழிதடங்கள் குறித்த முன்னறிவிப்பு உள்ளிட்டவைகளும் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பம்பா, சன்னிதானம், சுவாமி ஐயப்பன் சாலை, பம்பாவில் இருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்லும் பாதை, எருமேலியில் இருந்து அழுதா வழியாக பம்பா செல்லும் வழி, சத்திரம்- உப்புப்பாறை வழியாக சன்னிதானம் செல்லும் வழி ஆகியவற்றில் பக்தர்களுக்குக் கிடைக்கும் சேவைகள் குறித்த தகவல்கள் ஆப்பில் இடம்பெற்றுள்ளன. எருமேலியில் இருந்து பாரம்பரியப் பாதை வழியாகச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவை மையங்கள், அவசர மருத்துவக்குழு, தங்குவதற்கான இடங்கள், யானைக் கண்காணிப்பு குழு, பொதுக் கழிப்பிடங்கள், இலவசக் குடிநீர் மையங்கள், ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கான தொலைவு உள்ளிட்டவைகளும் ஆப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் கேரளா வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். தங்க அங்கி அணிந்து தீப ஒளியில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள். அன்றைய தினம் பூஜைகள் முடிந்து இரவு நடை அடைக்கப்படும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். தங்க அங்கி அணிந்து தீப ஒளியில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள். அன்றைய தினம் பூஜைகள் முடிந்து இரவு நடை அடைக்கப்படும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

APPLICATION LINK :