தற்பொழுது மேற்கிந்திய தீவுகளில் நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி நாளை நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டியுடன் ஒருநாள் தொடரை முடிக்கிறது. அதற்கடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அந்த போட்டி முடிந்ததும் இந்தியா திரும்பும் இந்திய அணி, இந்தியாவிற்கு வருகை தரும் தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாட உள்ளது.

மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் மூத்த வீரர் கேப்டனாக இருந்து வரும் பாப் டு பிளசிஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் கேப்டனாக இருக்கிறார்.

ஆனால் அதே சமயம் 20 ஓவர் போட்டிக்கான அணியில் அவர் இல்லை. அவருக்கு பதிலாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும், இளம் வீரர், விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் பல புதிய வீரர்களுக்கும், அறிமுகமாகி வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி :
குயின்டன் டீ காக் (c), ராசியே வான் டெர் டுசென், தெம்பா பாவுமா, ஜூனியர் தலா, பிஜுரன் போர்டுன், பீயூரன் ஹென்றிக்ஸ், ரீசா ஹென்றிக்ஸ், டேவிட் மில்லர், அன்றிச் நோர்ட்ஜெ, ஆண்டிலே பஹ்லுக்குவாயோ, டிவைன் பிரிடோரிஸ், காகிஸோ ரபாடா, தப்ராய்ஸ் ஷம்சி & ஜான்-ஜான் ஸ்முட்ஸ்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான தென்னாபிரிக்க அணி : பாப் டு பிளெஸ்ஸிஸ் (c), தெம்பா பாவுமா, தேயூனிஸ் டீ ப்ருயன், குயின்டன் டீ காக், டீன் எல்கர், ஸுபையர் ஹம்சா, கேஷவ் மகாராஜ், ஐடென்  மார்க்ரம், சீனுரான் முத்துசாமி, லுங்கி நிகிடி, அன்றிச் நோர்ட்ஜெ, வெர்னோன் பிளண்டர், டேன் பியேட்ட், காகிஸோ ரபாடா & ரூடி செகண்ட்.