Thursday, April 24, 2025
முகப்பு முக்கிய செய்திகள்இந்தியாஇந்தியா-பாக்கிஸ்தான் எல்லையில் சுதந்திர தின விழாவை கொண்டாடும் தோனி

இந்தியா-பாக்கிஸ்தான் எல்லையில் சுதந்திர தின விழாவை கொண்டாடும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது இந்திய ராணுவ வீரர்களுடன் முகாம்களில் தங்கியுள்ளார். இந்தியன் பாரா மிலிட்டரியில் கௌரவ லியூடெணன்ட் கலோனல் பதவியில் இருந்து வருகிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இரண்டு மாதங்கள் ஓய்வு கேட்டுக்கொண்ட தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. மாறாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி முதல் இன்று ஆகஸ்ட் 15 வரை ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களில் தங்கினார்.

அங்கு இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் மற்றும் ஆயுதங்கள் குறித்து தெரிந்துகொண்டார். மேலும் ராணுவ மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவர்களை சந்தித்து ஊக்கப்படுத்துதல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று சுதந்திர தின விழாவுடன் அவரது பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவுள்ளார். கடந்த 3 நாட்களாக லடாக் பகுதியில் இருந்து வரும் தோனி இன்று சுகந்திர தின விழாவினை சாய்சன் கிலேசியர் என்ற இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறார்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments