தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து முதலில் பாத்திமா வெளியேறினார். அவரை தொடர்ந்து வனிதா, மோகன் என அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேறி நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி உள்ளே நுழைந்தார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீடு களை கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீடு மிகவும் சாந்தமாகவே சென்றது. காண்போருக்கு பிக் பாஸ் வீட்டில் போரடிக்கும் என்பதனால் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி விட வனிதாவை உள்ளே அனுப்பினர்.

அவர்கள் நினைத்தது போலவே வனிதா உள்ளே சென்றதிலிருந்து பிக்பாஸ் வீடு அல்லல்பட்டு வருகின்றது. நடந்த பல்வேறு சம்பவங்களின் தொடர்ச்சியாக மதுமிதா தற்கொலை முயற்சி செய்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்றைக்கான அடுத்த promo தற்போது வெளியாகி இருக்கின்றது.

vantha biggboss, seithipunal

முன்னதாக பள்ளி மாணவர்கள் போல இருக்கும் பிக்பாஸ் வீட்டினர், தற்பொழுது மிகவும் கேசுவலாக உரையாடி கொண்டிருக்கும் கஸ்தூரியை பெட்ரூமில் இருந்து ஓடிவந்த வனிதா, ” யாரப்பாத்து குண்டுன்னு சொல்றிங்க.? நீங்க ரொம்ப ஸ்லிம்மா? 18 வயசுல பையன் இருக்கான் எனக்கு. என்ன பாத்தா அப்படியா தெரியுது.? ” என கூற அதற்கு விளக்கம் அளிக்க வந்த கஸ்தூரியை பார்த்து, ” நீங்க வாய மூடரிங்களா.?” என ஆங்கிலத்தில் சத்தம் போடுவதை போன்ற வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதற்கான வீடியோ: