இந்தியா ‘ஏ’ மற்றும் தென்ஆப்பிரிகா ‘ஏ’ அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி தொடர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 போட்டிக்கு ஒரு அணியும், அதற்க்கடுத்த கடைசி 2 போட்டிக்கு மற்றொரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு அணியிலும் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் ஆல்ரவுன்டர் விஜய் சங்கர் இடம் பெற்றுள்ளார். இதேபோல வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர், சாம்சன், ரானா ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். முதல் 3 போட்டிக்கு மணீஷ் பாண்டேயும், கடைசி 2 போட்டிக்கு ஷிரேயாஷ் அய்யரும் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ஏ அணிக்கான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியல், மனீஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், அன்மோல்பிரீத் சிங், ரிக்கி பூய், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், சிவம் துபே, கிருனல் பாண்ட்யா, ஆக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகுர் நாகூர்.

இந்தியா ஏ அணிக்கான 4 மற்றும் 5 வது ஒருநாள்  வீரர்களின் பட்டியல்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சுப்மான் கில், பிரசாந்த் சோப்ரா, அன்மோல்பிரீத் சிங், ரிக்கி பூய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, விஜய் சங்கர், சிவம் டியூப், வாஷிங்டன் சுந்தர், ஆக்சர் படேல், ராகுல் சாஹர், ஷார்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, இஷான் பொரல்.