Thursday, June 12, 2025
முகப்பு தமிழகம்போக்குவரத்து விதிமீறல்... யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்..? தமிழக அரசு அதிரடி..!

போக்குவரத்து விதிமீறல்… யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்..? தமிழக அரசு அதிரடி..!

போக்குவரத்து விதிமீறல் இடுபடுவோருக்கு அபாரம் விதிக்கும் அதிகாரத்தை சட்டம் ஓழுங்கு மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல் இடுபடுவோருக்கு அபாரம் விதிக்கும் அதிகாரத்தை சட்டம் ஓழுங்கு மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் அபராத தொகையை 10 மடங்கு உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, சாலை விதிகளை மீறுவோர் உள்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடமும், ஹெல்மெட் அணியாமல் செல்வோரிடமும் அபராதம் வசூலிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களாக போக்குவரத்து அதிகாரிகளால் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளிடம் யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர்களும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பதற்கான அதிகாரத்தை வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேவேளையில், எஸ்எஸ்ஐக்குக் குறைவான அதிகாரத்தில் இருக்கும் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments