சென்னை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான். திமுக ஆட்சி காலத்தில் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை. செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு தான் அதனால் எந்த பயனும் இல்லை. திமுகவினர் தமிழுக்கு துரோகம் செய்தவர்கள் .
தமிழ்நாட்டில் தமிழ் முழுமையாக மறைக்கப்படுகிறது என்று வேண்டுமென்றே ஸ்டாலின் பேசிவருகிறார். உலகம் உள்ளவரை தமிழ் பரவி வரும். திமுக ஆட்சியால் தான் தமிழுக்கு தீங்கு ஏற்படும் என கூறினார்.
முரசொலியில் என்னைப்பற்றி எழுதியதற்கு வாழ்த்துக்கள் எனவும், தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனறும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.