சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.