• இப்படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார்
  • ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் தமிழின் முதல் படம் இது
  • வரும் 20ம் தேதி இப்படம் வெளியாகிறது

நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மையோடு இயங்கும் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படம் வருகின்ற 20ம் தேதி காப்பான் படத்தோடு வெளியாகிறது.

இதில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருப்பது சிறப்பான விஷயம். உலகில் இப்படி ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் படங்கள் வெளியாகியிருந்தாலும் கதை, வசனம் எழுதி இயக்கியவரே நடித்திருப்பது இதுதான் உலகிலேயே முதல் முறையாகக் கருதப்படுகிறது.

ஒருவர் மட்டுமே அதுவும் ஒற்றை லொகேஷனிலேயே நடித்திருப்பதால் ரசிகர்களை படத்தில் ஒன்றச்செய்ய பின்னணி இசை மற்றும் ஒலி நுட்பங்களால் நிறைய புதுமைகளைச் செய்திருக்கிறாராம் ஆர்.பார்த்திபன். படம் பார்க்கும்போது அந்த சிறப்பு ஒலி நுட்பங்களும் ஒரு கேரக்டராக இருப்பதாகச் சொல்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

படத்துக்கு ஒலி அமைத்திருப்பவர் பிரபல ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி. இதுவரை இல்லாத அளவுக்கு ரசூல் பூக்குட்டி தன் திறமைகளைக் கொட்டி இதில் பணியாற்றியிருப்பதாலும், இன்னும் பல சிறப்புகளாலும் இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப ரா.பார்த்திபன் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பார்த்திபன் இப்படத்தை ஆஸ்கார் விருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். அதற்கு  விதிமுறைகள் இருப்பதால்தான் இப்படத்தை வரும் 20ம் தேதி வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழில் முதல் முறையாக இப்படி ஒரு படத்தை இயக்கி நடித்திருக்கும் பார்த்திபனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் வந்துக்கொண்டிருக்கின்றன. நிச்சயம் இப்படம் ஆஸ்கர் விருதை தட்டிச்செல்லும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.