சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.எஸ்சி நா்சிங் மற்றும் எம்.பாா்ம் போன்ற பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏற்கனவே தொடங்கி உள்ளது. விண்ணப்பம் சமர்பிக்க வரும் 16ந்தேதி கடைசி நாள் என மருத்துவக்கல்வி இயக்கம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள எம்.எஸ்சி நா்சிங், எம்.பாா்ம் படிப்புகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன. இந்தஇடங்களுக்கான தேர்வு கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்வி இயக்ககத் தோவுக் குழு நடத்துகிறது.
இந்த நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்டவற்றைப் போலவே நிகழாண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, https://www.tnhealth.org , https://tnmedicalselection.net இணையதளங்களில் அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 16-ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.