சென்னை: அயோத்தி நிலம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரவுள்ளதையடுத்து வரும் 10-ம் தேதி முதல் காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக காவல்துறை டி.ஜி.பி. அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்துதல் மற்றும் அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் 13-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து மாநில சட்டம்,ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு வரும் 10-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு அளிக்க கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.