தென்காசி : தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக பிரித்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இதன்படி தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்கும் நிகழ்ச்சி தென்காசியின் இன்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். தனியாக பிரிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 8 தாலுக்காக்கள் அடங்கும்.
33வது மாவட்டமாக உதயமானது ‘தென்காசி’
RELATED ARTICLES