அரியலூர் , டிசம்பர் 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 1,007 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் , 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 201 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று 4 வது நாளாக வேட்பு மனுதாக்கல் நடந்தது கடந்த 3 நாட்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 154 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 485 பேர் என மொத்தம் 643 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் நேற்று ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் . கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .

எனவே மொத்தத்தில் 1,007 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா அவர்கள் தெரிவித்துள்ளார்