அபுதாபி: சூர்யகுமார் அரைசதம் அடிக்க, ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் தற்போது நடக்கிறது. அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு ரோகித் சர்மா (35), குயின்டன் டி காக் (23) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அடுத்த பந்தில் இஷான் கிஷான் ‘டக்’ அவுட்டானார். சூர்யகுமார் அரைசதம் எட்டினார். குர்னால் பாண்ட்யா (12) நிலைக்கவில்லை.

மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல்., அரங்கில் தனது அதிகபட்ச ரன்கள் எடுத்த சூர்யகுமார் (79), பாண்ட்யா (30) அவுட்டாகாமல் இருந்தனர்.