வணக்கம்!!!

இந்த கட்டுரை எழுத எடுத்து கொண்ட காலம் ரொம்ப அதிகம் ஏனெனில்  வேலு நாச்சியார் பற்றிய குறிப்பு மிகவும் குறைவு. எதை தேடினாலும் கிடைக்கும் விக்கிபீடியா வில் கூட அவரை பற்றிய குறிப்பு மிகவும் குறைவு

இரானி வேலு நாச்சியார் என்ற பெயரை கேட்டாளே அவரின் வீரமும், ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போர்களும் தான் நினைவுக்கு வரும். அதனால் தான் அவரை வீர மங்கை வேலு நாச்சியார் என்று அழைக்கிறோம்.

இவரின் கணவர் கொல்லப்பட்ட பிறகு இவர் பட்ட துயரமும், அந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்த மாமனிதர்களையும், வீரர்களையும், சிவகங்கை மீட்பு போராட்டத்தையும், அதில் முக்கிய பங்கு வகித்த இரு தூண்கள் மருது சகோதர்களை பற்றியும், மேலும் பல விடயங்களை பார்க்கலாம்.

வேலு நாச்சியார் இளமை பருவம் :

1730-ம் ஆண்டு சேதுபதி வம்சத்தில் இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லமுத்து  சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார் அவர்களின் ஒரே மகளாய் பிறந்தவர் தான் வேலு நாச்சியார். இவர் சக்கந்தி என்ற இராமநாதபுரத்துக்கு அருகில் இருக்கும் ஊரில் தான் பிறந்தவர். சிறு வயது முதலே இவர் போர் பயிற்சிகளை பெற்று வந்தவர்.

போர் கலைகளான  வில், வேல், வாள், வளரி, குதிரையேற்றம் என எல்லா கலைகளையும் தேர்ச்சி பெற்று ஒரு வீர  மங்கையாகவே வளர்ந்து வந்தார்.

வீர மங்கை வேலு நாச்சியார்

திருமணம் :

1746- ல் சிவகங்கை இளைய மன்னர் முத்துவடுகநாதர் தேவர்கும் வேலு நாச்சியார்க்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறம், ராஜாங்கம், சிவகங்கை மக்கள் என மன நெகிழ்வோடும் ஆன்மீகமும் கலந்து வாழ்ந்து வந்தார்கள்.

பிரான்மலை -இல் உள்ள கோவிலில் இவரை பற்றிய பல குறிப்புக்கள் உள்ளன. இவர் இக்கோவிலுக்கு எப்பொழுதும் தன் கணவரோடு தான் வருவார்.

முத்துவடுகநாதர்  மறைவு:

முத்து வடுகநாத தேவர், இந்த பெயர் அந்த பகுதியில் மிகவும் பிரபலம், காரணம் இவரை எதிர்க்கும் திறன் எந்த எதிரிக்கும் இருக்காது.  அந்த பகுதியில் வளரி என்னும் ஆயுதம் மிகவும் புகழ் பெற்றது. இந்த கலையில் கைதேர்ந்தவர்.

இந்த நேரத்தில் தான் பிரிட்டன்-ன் கிழக்கு இந்தியா கம்பெனி, இந்தியாவில் அதிகாரம் கைப்பற்றி வரி வசூல் செய்து கொண்டு இருந்தது. கிழக்கு இந்தியா கம்பெனி முத்துவடுகநாதர் தேவரிடம் வரி கட்ட கட்டளை பிறப்பித்த பொழுது அதை கட்ட மறுத்துவிட்டார். அது மட்டுமின்றி, கிழக்கு இந்தியா கம்பெனி -கு எதிராகவும் களம்  இறங்கினர், முத்து வடுகநாத தேவர்.

இவரை அழிக்க நினைத்த ஜெனரல், ஒரு குறுக்கு வழியை தான் தேடினார். கரணம் வளரி கலையை பற்றி நன்கு அறிந்தவன் அந்த ஜெனரல். முத்து வடுகநாத தேவர் ஒரு வீரர் மட்டுமல்ல, சிறந்த சிவ பக்தர். இவர் சிவ ஆலயங்களுக்கு செல்லும் போது ஆயுதம் இன்றி தான் செல்வார்.

இந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்ட ஜெனரல், தன் ஆங்கிலேயே புத்தியை பயன்படுத்தினார்.அவர் பூஜையில் இருக்கும் போது சமாதானம் பேச அழைப்பு வந்துள்ளது என்று நுழைந்து மறைந்து இருந்து சுட்டு கொன்றான் ஜெனரல்.

1772 -ம் ஆண்டு முத்துவடுகநாத தேவர் காலமானார்.  தன் கணவர் தந்திரமாக கொலை செய்ய பட்டர் என்று அறிந்த வேலு நாச்சியார் அவர் உடல் மீது சபதம் எடுத்துக்கொண்டு, அவரே தன் கணவர் உடலை தூக்கி கொண்டு சென்று, எரியூட்டுகிறார்.

வீர மங்கை நாச்சியார் அவர்கள் அன்றே பெண் விடுதலை, மூடநம்பிக்கை இதையெல்லாம் உடைத்தெறிந்தவர். பிறகு அந்த சிவகங்கை மண்ணை பிடிக்க வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு 8 வருடங்கள் தேவை பட்டது. இந்த 8 வருடங்கள் மருது சகோதரர்கள் சொன்ன அறிவுயறையின் பெயரின் தலை மறைவாக வாழ்ந்து வந்தார்.

வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களின் வரலாற்றில் மருது சகோதர்கள் பற்றி பேசாமல் போனால் நன்றாக இருக்குமோ! அவர்களை பற்றியும் சிறு தொகுப்பை பார்த்துவிட்டு செல்லலாம்.

மருது சகோதரர்கள்:

மருது சகோதரர்கள் முத்துவடுகநாதர் படையில் முக்கிய தளபதிகள். இதில் பெரிய மருது, மிகவும் கோபக்காரர். அவர் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தன்னை நோக்கி வரும் வேங்கையை ஒரே அடியில் சாய்க்கும் அளவுக்கு பலசாலி.

சின்ன மருதுவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், திட்டம் தீட்டுதல் அவருக்கு கைவந்த கலை, அவர் ஒருவரை சமாதானம் பேச அழைக்கிறார் என்றால் எதிராளிக்கு கொலை நடுங்கும். அந்த அளவுக்கு திட்டமிடுதலில் புத்திசாலி.

இவர்கள் இருவரும் இணைந்தால் எதிரி நிலை என்ன என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இவர்கள் இருவரும் முத்துவடுகநாதருக்கு இரு கைகள். இப்பொழுது புரிந்து இருக்கும் ஏன் ஜெனரல் இவரை மறைமுகமாக நின்று கொலை செய்தான் என்று.

இந்த இருவர் தான் , வேலு நாச்சியார் அவர்கள் தலைமறைவாக இருக்க அறிவுரை சொன்னது, சொன்னது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் அவருக்கு அரணாக இருந்து காத்தவர்களும் இவர்களே.

இவர்களை பற்றி மேலும் பார்க்க போகிறோம். அதனால் அடுத்த விடயத்துக்கு செல்வோம் .

தலைமறைவு வாழ்க்கை:

இரானி தலைமறைவாக இருந்த பொழுது பல கோட்டைகளில் இருந்தார். தேவகோட்டை அருகில் உள்ள சக்கரபதி கோட்டை, அரண்மனை சிறுவயல் கோட்டை, பாண்டியன் கோட்டை, அரியக்குறிச்சி கோட்டை, படமாத்தூர் கோட்டை, மானாமதுரை கோட்டை, என பல கோட்டைகளை போர் பயிற்சி செய்யும் இடமாக இருந்துள்ளது.

இந்த கோட்டைகள் எல்லாம் காடுகளுக்கு நடுவில் இருந்ததால், சிரமம் இல்லாமலும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் முட்புதர்களே, அரணாக இருந்ததால் அந்நியர்கள் அத்தனை சீக்கிரம் உள்ளே நுழைந்தித்த முடியாது. அந்த அளவிற்கு இடங்களை தேர்வு செய்து கோட்டைகள் கட்டப்பட்டது.

இந்த கோட்டைகள் எல்லாம், ஆயுத கிடங்கவும், பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.

தற்பொழுது இந்த கோட்டைகள் உள்ள அவல நிலையை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது வேதனை தரும் விடயம்.

அரண்மனை சிறுவயல், சுற்றிலும் வயல் வெளி, உள்ளே, ஆயுதக்கிடங்கு வாள், வேல், வளரி, என எல்லா ஆயுதங்களும் இங்கே பதுக்க பட்டு இருக்க வேண்டும்.

இது போன்று பல கோட்டைகள் இரானி வேலு நாச்சியார் தலைமறைவாக இருக்க உதவியுடன், ஆயுத பயிற்சி, ஆயுத கிடங்கு, என பலவற்றிற்கு பயப்பெற்றுள்ளது.

வேலுநாச்சியார் கடைசியில் தலைமறைவாக இருந்த இடம் விருப்பாச்சி. அங்கு கோபால நாயக்கர் இடம் அடைக்கலம் அடைந்தார்.

மேலும் வேலு நாச்சியாரை பற்றி காணும் முன், இந்த கோபால நாயக்கர் யார் என்பதை சற்று பார்ப்போம்.

கோபால நாயக்கர்:

திண்டுக்கல் சீமையில் உள்ள இருபது  பாளையங்களில் ஒன்று விருப்பாச்சி. அந்த பாளையத்தை ஆட்சி செய்தவர் தான் இந்த கோபால நாயக்கர். எல்லா சுதந்திர வீரர்களையும் கொன்ற ஆங்கிலேயே ஆட்சி, அனால் அவர்கள் அனைவரும் சுதந்திரத்திற்காக எதிர்த்தவர். அனால் இவர் அந்த வீரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

இந்த காரணத்திற்காக இவரையும் தூக்கில் தொங்கவிட்டனர் ஆங்கிலயேர்கள். சிவங்ககை சீமை இரானி வேலு நாச்சியார் அவர்களே, சிவகங்கை மீட்பு போராட்டத்தின் போது அடைக்கலம் இருந்த இடம், விருப்பாட்சி கோபால நாயகர் இடம். அந்த அளவிற்கு நம்பிக்கைக்குரிய இடம் விருப்பாட்சி.

இது போல, பல நல்ல உள்ளங்களும், பெரிய மனிதர்களும் இரானி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்த பொழுது உதவியது காரணம் பயமோ அல்லது இரானி என்ற காரணத்திற்காகவோ இல்லை, இவரின் துணிச்சல், மக்கள் மேல் வைத்து இருந்த அதீத அன்பு இதெற்கெல்லாம் கட்டுப்பட்டவர்களே மக்கள், அதனால் தான் இவருக்கு இதனை உதவி கிடைக்க காரணம்.

அதே போன்று மற்றும் ஒரு நல்ல உள்ளம் பற்றியும் பார்க்க வேண்டிய தருணம். அவர் தான் உடையாள். இப்பொழுது பிரசித்தி பெற்ற வெட்டு உடையாள் காளியம்மன் கோவில் இவரால், இரானி வேலு நாச்சியார் அமைத்த கோவில் தான். சரி அவரை பற்றியும் கண்டு விட்டு செல்வோம்.

உடையாள்: 

ஒரு முறை வேலு நாச்சியார் செல்லும் போது உடையாள் வீட்டு பக்கம் செல்கிறாள், அப்பொழுது தண்ணீர் கேட்கிறாள் வேலு நாச்சியார். வந்து இருப்பது இராணி என்று புரிந்து கொள்கிறாள் உதவுகிறாள். வேலு நாச்சியார் செல்லும் போது, என்னை கர்னல் பஞ்சோ தேடுகிறாள் நான் செல்லும் திசையை சொல்லாதே என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.

பின்னால் பஞ்சோவின் படை வந்து உடையாளிடம் விசாரிக்க, ஆமாம் இராணி வந்தார் என்று சொல்கிறாள். எந்த திசையில் சென்றால் என்று கேட்டதற்கு, அதை உங்களிடம் சொல்ல மாட்டேன் என்றாள். நீ சொல்லவில்லை என்றால் உன்னை துண்டு துண்டாக வெட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். உடையாள் சிவகங்கை சீமை பெண் அல்லவா, என்னை வெட்டினாலும் சொல்ல மாட்டேன் என்று சொன்னாள். அவளை துண்டு துண்டாக வெட்டி அதே இடத்தில கிடத்தி விட்டு சென்று விட்டார்கள்.

வேலு நாச்சியார் எப்படி பட்டவர் என்றால், உடையாள் வெட்டு பட்ட இடத்தில ஒரு கோவிலை கட்டி வெட்டுடையாள் காளியம்மன்   என்று பெயர் சூட்டி கிறாள்.  அங்கு ஒரு உண்டியல் வைத்து, அதில் தன் வைர தாலியை முதலில் சமற்கிறாள். இக்கோவில் இன்றும் சிறப்பு வாய்ந்த கோவிலாக உள்ளது.

1772 – ம் ஆண்டை வேலு நாச்சியார் அவர்களுக்கு மிகவும் கடுமையான ஆண்டு என்றே கூறலாம். கொல்லங்குடி, பனங்குடி, பாகனேரி, திருபுவனம்,மல்லக்கோட்டை, மேலூர்,லிங்கவடி, சிறுமலை, திண்டுக்கல்,விருப்பாச்சி என்று திரிந்தார்.

ஐதர் அலி-யின் உதவி : 

விருப்பாட்சியில் இருக்கும் பொழுது ஐதர் அலிக்கு கடிதம் எழுதுகிறார் இரானி, அதற்கு ஐதர் அலி, இங்கு வந்த நீங்கள் போர் பயிற்சி எடுக்கலாமே என்று கேட்டதற்கு, இல்லை இருக்கட்டும், நான் விருப்பாட்சி மற்றும் அரண்மனை வயல், படமாத்தூர் போன்ற கோட்டைகளில் மாறி மாறி பயிற்சி எடுத்துக்கொள்கிறேன் என்று பதில் அனுப்பிக்கிறார்.

மேலும், இரானி கேட்ட பன்னிரண்டு பீரங்கிகள், ஐநூறு தூப்பாக்கிகள், குதிரைகள் வீரர்கள், என படையை திப்பு சுல்தான் மூலமாக அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் தன் தளபதிகள் பெரிய மருது, பிரதானி தாண்டவராயன் பிள்ளை, சின்ன மருது மற்றும் அவர் படையினருடன்,கொல்லங்குடி, பனங்குடி, பாகனேரி, திருபுவனம்,மல்லக்கோட்டை, மேலூர்,லிங்கவடி, சிறுமலை, திண்டுக்கல்,விருப்பாச்சி போன்ற கோட்டைகளில் போர் பயிற்சி எடுத்து கொண்டு இருந்தார்.இது போன்ற  இடங்களை தேர்வு செய்யவே தனி நிர்வாக திறமை வேண்டும், அந்த  திறனும் இரானி வேலு நாட்சியாரிடம் இருந்தது. வேலடி தம்மம், திருப்பா சேத்தி , சிங்கம்புணரி போன்ற இடங்களில் ஆயுதம் தயாரிக்கும் இடமாகவும் இருந்தது.

இதற்கிடையில், 1773- ல்  நவாப் சிவங்கங்கை யை உசைன் நகர் என்று பெயர் மாற்றி இருந்தார். மக்கள் அனைவரும் செய்வது அறியாமல் இரானி வேலு நாச்சியாரின் வருகையை எதிர்நோக்கி காத்து இருந்தனர்.

போர் ஆரம்பம் :

பின் 1780-ல் போர் அறிவித்து வியூகம் அமைத்தார் இராணி வேலு நாச்சியார்.காரணம் 5000 பெண்களை வெளியேற்ற வேண்டும் என்று தவிப்பு. போர் காலத்தில் மக்கள் பாதிப்பு அடைய கூடாது என்று எண்ணம் அவருக்கு மேலோங்கியது. 5000 மக்களை ஒரே நேரத்தில் வெளியேற்றினால் ஆங்கிலேயர்கள் மோப்பம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று எண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். பஞ்சம் பிழைக்க செல்வது போல், உறவினர் வீட்டிற்கு செல்வது போல், நோய் வாய் பட்டுள்ளது போல் என்று அத்துணை மக்களையும் வெளியேறினார்.

பின் ஐதர் அலியுடன் சேர்ந்து வியூகம் அமைக்கிறார் இரானிவேலு நாச்சியார். காரணம் ஜெனரல் பெய்லி, மற்றும் கர்னெல் மான்ஜோ, இரண்டு கொடிய விலங்குகளை ஒன்று சேர விட்டால் சேதம் அதிகமாக இருக்கும் என்று எண்ணினார் ஐதர் அலி, அதை வரவேற்கிறார் இராணி வேலு நாச்சியார். அந்த நேரத்தில் ஐதர் அலிக்கு யோசனை கூறுகிறார் இரானி, நான் சிவகங்கையை எடுத்துக்கொள்கிறேன், நீங்கள் மைசூர் 2-ம் போரை அறிவியுங்கள்.

அந்த நேரத்தில் ஐதர் அலி இரானி வேலு நாச்சியார் சொன்னதை ஏற்கிறார். காரணம்  இவர் கர்னெல் மான்ஜோ வை அழிக்க நீண்ட நாள்  எடுத்து கொள்வார், நாம் அதற்குள் பெய்லி ஐ அழித்துவிடலாம் என்று என்னிக்கிறார். ஆனால் நடந்தது வேறு, மான்ஜோ வை அழிக்க எடுத்து கொண்ட நாள் மிக குறைவு.

இரானி வேலு நாச்சியார் ஜெயிக்க அவருடைய வீரம் மட்டுமல்ல, விவேகம், தன் படை அதிலும், தற்கொலை படை, கொரில்லா படை இதையெல்லாம் வைத்து தான் இவர் இத்தனை சுலபமாக இந்த வெற்றியை பெற முடிந்தது என்று கூறுகிறது வரலாறு.

குயிலி :

இதில் குறிப்பிட வேண்டியது, குயிலி என்னும் வீர பெண், இவர் தான் முதல் உயிர்பலி இரானியின் படையில். இவரின் செயலை கண்டு போர் தந்திரம் தெரிந்தவர் கூட மிரண்டு தான் போய்  இருந்தனர். இரானி வேலு நாச்சியாரின் வியூகம் முதலில், ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை அழிக்க வேண்டும், அதற்கு துணை நின்றவர் இந்த குயிலி. இவரின் செயலை கண்டு மிரளத்தவர் யாரும் இருக்க முடியாது.

1780-ல் நவராத்திரி அன்று முதன் முதலில் ராஜா ராஜேஸ்வரி கோவிலில் நுழையும் போது, எல்லோரும் கோவிலுக்குள் சென்று விட்டனர், இந்த குயிலிஐ தவிர அங்கு விளக்கேற்ற வைத்து இருந்த எண்ணையை தன் மேல் ஊற்றி கொண்டே ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கு பக்கம் செல்கிறார் குயிலி. கடைசியில் நெருப்பை பற்ற வைத்து வெற்றி வேல், வீர வேல் என்று சொல்லும் போது உலகமே திகைத்தது, ஆங்கிலேயரையும் சேர்த்து.

இதனால் தான் வீர மங்கை வேலு நாச்சியார் -ன் வரலாறு இருக்கும் வரையிலும் இந்த வீர தாய் குயிலியின் வரலாறும் இருக்கும்.

தொடரும்…..