Wednesday, February 12, 2025
முகப்பு மாவட்டம்அரியலூர்பத்திரிகை செய்திகள்

பத்திரிகை செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தவரின் குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் மூலம் “SMILE” என்ற கடன் திட்டத்தை செயல் படுத்த உள்ளது

இத்திட்டத்தில்  பயன்பெறவிரும்பும் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 3.00 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் .குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும் .

இத்திட்டத்தில்  அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ 5.00 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ 1.00 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் .ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில்  பயன்பெற விரும்புவோர் , குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு அரியலூர் ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி., இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments